Kuntil

குன்றிலிருந்து விழுந்தவன்

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!

ஒரு வாலிபன் ஒரு செங்குத்தான குன்றிலிருந்து விழுந்து காயப்பட்டான். இதினால் அவன் காயங்களின் வழியாய் அதிக இரத்தம் வெளியாகிவிட்டதால் சாகுந்தருணம் வந்துவிட்டது. உடனே தகப்பன் அவனை வைத்தியனிடம் கொண்டுபோக வைத்தியர் தகப்பனை நோக்கி, - ஜீவன் இரத்தத்தை இழந்துவிட்டபடியினால் யாராவது தன் சொந்த ஜீவனை, அதாவது தன் சொந்த இரத்ததை கொடுப்பார்களாகில் மாத்திரம் தேறுவான் - என்றார். ஆன்பு நிறைந்த இருதயத்தையுடைய அந்தத் தகப்பன் உடனே தன் இரத்தத்தை கொடுக்க ஆயத்தமானான். தகப்பனின் இரத்தத்தை மகனின் நரம்பில் செலுத்த, மகன் சுகமடைந்தான்.

அவ்வண்ணமே, மனுஷனும் பரிசுத்தமெனும் குன்றிலிருந்து கீழே விழுந்து தன் சொந்தப் பாவங்களால் காயப்பட்டு ஆவிக்குரிய ஜீவனை இழந்து மரணத்தறுவாயிலிருக்கிறான். ஆகையால் இப்போது மனந்திரும்பி என் மேல் விசுவாசமுள்ளவர்கள் அழிவுக்குத் தப்பி நித்திய ஜீவனை அடைந்துகொள்ளும்படிக்காக என் சொந்த ஆவிக்குரிய நித்திய இரத்தத்தை ஈகிறேன்.

அவர்கள் ஜீவனை அடையவும் அந்த ஜீவன் பரிபூரணப்படவுமே நான் வந்தேன்.

எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். அப்.10:35

கிறிஸ்து இயேசுவுக்குள்ளான உங்கள் அனைவருக்கும் சமாதானம் உண்டாவதாக. ஆமேன் தேவன் தாமே உங்களனைவரயும் ஆசீர்வதித்து வழி நடத்துவாராக.

ஆமென்.கர்த்தராகிய இயேசுவே வாரும்.